செம்மணி மனித புதைகுழி பகுதிகளை  இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது