யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் வெவ்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல்கள் சில தெரிவிக்கின்றன.எனினும் யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டைய காலப்பகுதிக்கானதென மற்றும் சில தரப்புக்கள் கூறிவருகின்றன.

இதனிடையே இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 23 நாட்கள்  இடம்பெற்ற அகழ்வில் 54 சான்றுப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக்  கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களது பால் போச்சி முதல் ஆடை அணிகலன்கள் உள்ளிட்ட பல சான்று பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் இராணுவ பயன்பாட்டிலுள்ள துப்பாக்கி ரவைகளோ வெட்டு காயங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.