காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படும் – டிரம்ப்

மதுரி Tuesday, July 29, 2025 உலகம்

காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து சென்றுள்ள அவர், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காசாவில் உணவுத் தட்டுப்பாடு உள்ளது உண்மை என்றும், அதைப் போக்க இஸ்ரேல் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காசா மக்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க மற்ற நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Related Posts

உலகம்

Post a Comment