அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய, ஓகஸ்ட் 1 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை மாற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15 வீத வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

  அமெரிக்க ஜனாதிபதிஐரோப்பிய ஒன்றியம்டொனால்ட் ட்ரம்ப்