Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.