யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) தனது உயிரை மாய்த்துள்ளார்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48  வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்று, தடுப்பில் இருந்து வெளியே வந்து ,தனது சகோதரியுடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்தவர் நேற்றைய தினம் தனது உயிரை மாய்த்துள்ளார். என உறவினர்கள் மரண விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.