கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல்  குறித்த விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவா்  இன்று (28)  கைது செய்யப்பட்டிருந்தாா்.

கைது செய்யப்பட்ட  முன்னாள் கடற்படைத் தளபதியை  இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  போதே ,அவரை ரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Spread the love

  கடத்தல்நிஷாந்த உலுகேதென்னமுன்னாள் கடற்படைத் தளபதிவிளக்கமறியல்