Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கையரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.தேர்தலிற்கான தொடர்புடைய சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய வாக்களிப்பு முறையை ஏற்றுக்கொள்வதற்கான வரைவு சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையேபயங்கரவாத தடைச் சட்டமாக இருக்கலாம், மாகாண சபை தேர்தலாக இருக்கலாம், காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கலாம் எந்த பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வினை வழங்கவில்லை. அடுத்த வருடம் தேர்தல் வரும் என நாங்கள் இப்போதும் ஒரு கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை அமைச்சர் மாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றோம் என்று கூறுவார்..
பிமல் ரத்னாயக்க என்ற அமைச்சர் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும் என்று கூறுவார்.ஜனாதிபதி அமைச்சர்களை பேசவிட்டு அவர் மௌனமாக இருப்பார்.
உலகத்திலேயே மிகவும் பெருமளவிலான பலம்பொருந்திய கடற்படை, விமானப்படை, காலாட்படை என பல படையணிகளை கொண்டு தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி இப்போது நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்கள் ஊடாக அரசாங்கத்துடன் பேச முடியுமா என்ற நிலைமைக்குள் வந்திருக்கின்றோம்” எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.