Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.
குறித்த வீதித் தடை எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் மாற்று வீதிகள் ஊடாகவே பயணிக்க முடியும் என யாழ் மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.