யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் இளைஞர்கள் குழு பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அதன் போது, இளைஞர்களில் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் , அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக இளைஞனின் சடலம் யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , இளைஞனின் இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக ஆய்வுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.