Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, குறித்த பொலிஸ் நிலையத்தின் இரு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவர் சிறைக்கூடத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.