நட்பு நாடுகளை இழக்கும் இஸ்ரேல் – காஸாவில் நிலை என்ன?காணொளிக் குறிப்பு, நட்பு நாடுகளை இழக்கும் இஸ்ரேல் – காஸாவில் நிலை என்ன?நட்பு நாடுகளை இழக்கும் இஸ்ரேல் – காஸாவில் நிலை என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மனிதாபிமான நெருக்கடி, உணவு பற்றாக்குறை, இடம்பெயர்வு, நட்பு நாடுகளே இஸ்ரேலுக்கு நெருக்கடி என காஸா விவகாரம் தீவிரமடைந்து வந்த நிலையில், காஸாவின் சில பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளில் வியூக ரீதியான இடைநிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ஞாயிற்றுக்கிழமை முதல், மனிதாபிமான நோக்கங்களுக்காக காலை 10:00 மணி முதல் இரவு 8 மணி வரை ராணுவ நடவடிக்கைகளில் வியூக ரீதியான இடைநிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அல்-மவாசி, டெய்ர் அல்-பலாஹ் மற்றும் காஸா சிட்டி ஆகிய இடங்களில் இந்த இடைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும் வரை தினமும் அமலில் இருக்கும் என்றும், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப இதை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நிலைமை குறித்த கவலைகள் அதிகரித்து வந்த சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேலின் தாமதமான நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜூலை 21-ஆம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றொரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

இந்த நெருக்கடி ஒருபுறம் என்றால், போர் நிறுத்தம் செய்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என தீவிர தேசியவாதிகள் நெதன்யாகுவை அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் நெதன்யாகு தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளார்.

கூடுதல் விவரம் காணொளியில்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு