Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நபர் ஒருவர் கஞ்சா போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதன் போது , 34 பொதிகளை சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
இலங்கைகேரளா கஞ்சாகேரளா கஞ்சா பொதிகள்கைதுயாழ்ப்பாணம்