Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய கால எல்லை பற்றி பிரதமர் தெளிவாக குறிப்பிடவில்லை. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தில் இதற்குரிய பணி இரகசியமாக இடம்பெறுகின்றதா எனவும் தெரியவில்லை.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து விரைவில் ஒரு வருடமாகப்போகின்றது. எனினும், புதிய அரசியலமைப்பு பற்றி இற்றைவரை வெளிப்படையாக எதுவும் நடக்கவில்லை.
மக்களின் கருத்துகள் கோரப்படவில்லை. நிபுணர்களின் யோசனை உள்வாங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பங்களிப்பும் பெறப்படவில்லை.
எனவே, புதிய அரசியலமைப்புக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்குமாறு கோருகின்றேன்.” – என்றார்.