காணொளிக் குறிப்பு, 5,707 ஸ்டில் கேமராக்கள்- கின்னஸ் சாதனை படைத்த பல் மருத்துவர்5,707 ஸ்டில் கேமராக்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை பல் மருத்துவர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏ.வி. அருண். இவர் 5,707 ஸ்டில் கேமராக்களை சேகரித்துள்ளார். இவரது இந்த சாதனையை கின்னஸ் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கீகரித்துள்ளது.

தான் ஆறாம் வகுப்பு பயின்ற போது தனது தந்தை முதல் முதலில் கேமரா வங்கிக் கொடுத்ததாகவும், அப்போதிலிருந்து கேமரா மற்றும் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டதாகவும் கூறினார்.

இவருடைய சேமிப்பில் அமெரிக்கா வியாட்நாம் போரில் பயன்படுத்திய கேமரா, உளவு பார்க்கப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீது பொருத்தப்பட்ட கேமரா எனப் பல வித்தியாசமான கேமராக்கள் உள்ளன.

தயாரிப்பு : நிதிஷ் குமார்

படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு : சாம் டேனியல்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு