இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட  அவர், மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும்  கூறியுள்ளார்.

இதேவேளை  தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புவதாகவும், தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு தமது அரசுக்கு உள்ள நிலையில் அதனை நோக்கி பயணிப்பதாகவும் வலியுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நல்லிணக்கம் நோக்கிய விரிவான பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.