‘5 ஆயிரம் சம்பளம், 8 ஆயிரம் வாடகை’ – மதராசி கேம்ப் மக்களின் நிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு காணொளிக் குறிப்பு, மதராசி கேம்ப் இடிப்பு: ‘5 ஆயிரம் சம்பளம், ஆனால் 8 ஆயிரம் வாடகை’ – மக்களின் நிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு ‘5 ஆயிரம் சம்பளம், 8 ஆயிரம் வாடகை’ – மதராசி கேம்ப் மக்களின் நிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

23 ஜூலை 2025

நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்?

“இதுதான் இன்று தங்களின் நிலை” எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள்.

ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட நினைக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய் துகொடுக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மறுபுறம், மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.

இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டன.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் தலைநகரில் வசித்த தமிழர்களைத் தேடிப் பயணித்தது.

அவர்களின் நிலை என்ன? விரிவாக காணொளியில்…

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு