நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட  பகுதிகளில்  பொது  இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கமராக்கள் ( cctv)  நிறுவப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும்  பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை கண்காணிக்கவே அவை பொருத்தப்பட்டுள்ளன.

கமரா பதிவுகளின் ஆதாரங்களின் பிரகாரம் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக பிரதேச சபை சட்டத்தின்  பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் அறிவித்துள்ளார்.

Spread the love

  கண்காணிப்பு கமராக்கள்நல்லூர் பிரதேச சபை