அனுர அரசு கறுப்பு ஜீலையினை முன்னிட்டு கொழும்பிலிருந்து நல்லிணக்க புகையிரத சேவையொன்றை இன்று முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  இன்று புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றிருந்தது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனிடையே தமிழர்களின் கறை படிந்த நாளான இன்று ஜூலை 23  சகோதரத்துவமாய் வாழ்வோம் என புகையிரதம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து அனுர அரசு ஆதரவாளர்களை இன்று அழைத்து வந்திருந்தது. ஞாபகார்த்த நட்புறவு புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுமுள்ளது.