Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழீழ விடுதலை இயக்க தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் தற்போதைய தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே அச்சம்பவம் இடம்பெற்றது. எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கறுப்பு ஜூலை நினைவுதினம் தமிழீழ விடுதலை இயக்க ஏற்பாட்டிலும் உணர்வுபூர்வமாக யாழ்.நகரிலும் திருகோணமலையிலும் 26ம் திகதி தமிழீழ விடுதலை இயக்க ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.