Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் உள்ளே இழுத்ததால் ஒருவர் மரணம் – என்ன நடந்தது?காணொளிக் குறிப்பு, சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் சென்றவர் மரணம்எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் உள்ளே இழுத்ததால் ஒருவர் மரணம் – என்ன நடந்தது?
22 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவில் ஒருவர் சங்கிலி உடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் சென்றபோது எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக் கொண்டது. இறுதியில் அவர் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் எந்த உலோகமும் அணிந்துகொண்டு செல்லக்கூடாது என்பது நமக்குத் தெரியும்.
ஆனா அப்படிச் சென்றால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமா? ஏன் அவருக்கு இவ்வாறு நடந்தது? என்பது போன்ற பல கேள்விகள் இந்த சம்பவத்தை ஒட்டி எழுந்துள்ளன.
எம்ஆர்ஐ இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது எப்படி?
பொதுவாக இந்த இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்தி வாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும்.
அதனால்தான் இந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
உயிரிழந்த நபர் உடற்பயிற்சிக்கு பயன்படும் பெரிய உலோகச் சங்கிலியை உடலுடன் இணைத்திருந்ததால் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார் என நசாவ் கவுன்டி போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போலீசார் இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெயர் கெய்த் என மனைவி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
“அவர் எனக்கு குட்-பை சொன்னார். பின் அப்படியே உருக்குலைந்துவிட்டார்” என மனைவி வேதனை தெரிவிக்கிறார்.
“முழங்காலில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது, எனது கணவரை நான்தான் உதவிக்கு உள்ளே அழைத்தேன். அவர் 9 கிலோ எடையுள்ள சங்கிலியை அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் சட்டென்று இயந்திரத்தின் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் அவரை மீட்க முயற்சித்தார். ‘மெஷினை அணையுங்கள், 911-க்கு போன் செய்யுங்கள்’ எனக் கதறினேன்” என சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் விவரிக்கிறார்.
எம்ஆர்ஐ இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்தம் சாவி, செல்போன் என எந்த அளவில் உள்ள பொருட்களையும் எளதில் உள்ளே இழுக்கக் கூடியதாகும். இது இயந்திரத்தை பாதிக்கும் அல்லது நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.
இதற்கு முன்பு 2001ம் ஆண்டு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது 6 வயது சிறுவன் உயிரிழந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்த ஈர்ப்பு, ஆக்ஸிஜன் டேங்கை அறையில் அங்குமிங்கும் இழுத்தது. ஆக்ஸிஜன் டேங்க் அச்சிறுவன் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது, அவரின் மனைவி. மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு