Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் ஆதன மதிப்பீடு மேற்கொண்டு வரி அறவிடுவதற்கான ஒத்துழைப்புக்கள் மற்றும் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர்.
மேலும், சபையின் இரண்டு உப அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் அதனை அமைத்துத் தருவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை முன்வைத்தனர்.
இவற்றுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.