Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் டிரம்ப் – டாலருக்கு மாற்று சாத்தியமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பை குறிவைத்து வருகிறார்.2 மணி நேரங்களுக்கு முன்னர்
பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்தக் குழு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முயற்சித்ததாகக் குற்றம்சாட்டிய டிரம்ப் கடினமான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எந்த நாட்டின் பெயரையும் டிரம்ப் குறிப்பிடவில்லை.
பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையே முத்தரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் டிரம்ப்பிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. சமீபத்திய பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மீது வரிகள் அதிகரிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது.
சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்த மூன்று நாடுகளின் நலன்களை மட்டுமல்ல, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யா மற்றும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்ஐசி) அமைப்பை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா உடன் ரஷ்யா பேச்சுவார்த்தையில் உள்ளது என அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரெய் ருடென்கோ முன்னர் தெரிவித்திருந்தார்.
இதே கருத்து தொடர்பாக தான் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியானும் பேசியிருந்தார்.
டாலர் மற்றும் பிரிக்ஸ் பற்றி டிரம்ப் என்ன கூறினார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசியுள்ளார் டிரம்ப்கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் மசோதாவை ஒன்றைப் பற்றி பேசிய டிரம்ப் அதனை புகழ்ந்ததோடு, இந்த மசோதா அமெரிக்கா டாலரை வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
அப்போது பிரிக்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், “பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிற சிறிய குழு ஒன்று உள்ளது, அது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அது அமெரிக்க டாலர், அதன் ஆதிக்கம் மற்றும் தரங்களைக் கைப்பற்ற முயற்சித்தது. பிரிக்ஸ் தற்போதும் இதைத்தான் விரும்புகிறது.” என்றார்.
“பிரிக்ஸ் குழுவில் உள்ள அனைத்து நாடுகள் மீது 10 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக நான் கூறினேன். அதற்கு அடுத்த நாள் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது, ஆனால் ஒருவருமே வரவில்லை.” என டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசிய டிரம்ப், “நாங்கள் டாலரை வீழ்ச்சியடைய விடமாட்டோம். டாலர் உலகளாவிய நாணயம் என்கிற நிலையை நாம் இழந்தால். அது ஒரு உலகப் போரை இழப்பதற்குச் சமம்” எனக் கூறினார்.
மேலும் அவர், “நான் இந்த பிரிக்ஸ் நாடுகள் குழுவைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் மீது கடினமான நிலைப்பாட்டை எடுத்தேன். இந்த நாடுகள் எப்போதாவது ஒன்றாக வந்தால், இந்தக் குழு முடிந்துவிடும்,” எனத் தெரிவித்தார்.
17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
“பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் எந்த நாடுகளின் மீதும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இந்த கொள்கையில் எந்த விதிவிலக்கும் இருக்காது” என ஜூலை 7ஆம் தேதியிட்ட சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் வியாழன் அன்று (ஜூலை 17) வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆற்றிய உரையிலும் இந்த அச்சுறுத்தலைக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிக்ஸின் நிகழ்ச்சி நிரலில் என்ன இருந்தது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பிரிக்ஸ் ரியோ பிரகடனத்தில் உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச நிலைத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் இருந்தன. இதோடு ஒருதலைபட்சமான வரிகளும் விவாதிக்கப்பட்டன.
எனினும் அறிக்கையில் அமெரிக்கா பற்றிய குறிப்பு இல்லை.
வர்த்தகப் போக்கை சிதைத்த உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறும் ஒருதலைபட்சமான வரி மற்றும் வரியில்லா நடவடிக்கைகளின் அதிகரித்த பயன்பாடு பற்றி பிரிக்ஸ் நாடுகள் கவலை கொள்வதாக ரியோ பிரகடனம் தெரிவிக்கிறது.
இவை போக, ஒருதலைபட்சமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் திணிப்பது சர்வதேச சட்ட மீறல் மற்றும் ஒருதலைபட்சமான பொருளாதார தடைகள் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளின் படி வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் அச்சுறுத்தலும் ஆர்ஐசியை வலுப்படுத்தும் முயற்சிகளும்
பட மூலாதாரம், X/DR S JAISHANKAR
2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்தது. அதன்பிறகு ஆர்ஐசி தொடர்பாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜூலை 17 ஆம் தேதியன்று ஆர்ஐசி அமைப்பை மீண்டும் தொடங்குவது பற்றி வெளியுறவு அமைச்சகம் பரிசீலிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் “பரஸ்பரம் சவுகரியமான முறையில்” மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள டியான்ஜினுக்குச் சென்றபோது ஆர்ஐசி பற்றி விவாதிக்கப்பட்டது.
“ஒருதலைபட்சவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் அதிகார அரசியல் மற்றும் அச்சுறுத்தும் போக்கு உலகிற்கு தீவிரமான சவால்களாக உள்ளன” என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த ஜூலை 14 அன்று அமைச்சர் ஜெய்சங்கர் உடனான கூட்டத்தில் தெரிவித்தார். எனவே இரு நாடுகளும் “நல்லிணக்கத்துடன் வாழ்ந்து இருவரும் வெற்றி பெற உதவுவதற்கு” வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா உறவில் சீனாவின் கருத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது.ரஷ்யாவின் எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று. இந்த இரு நாடுகளும் டிரம்ப்பின் 100 சதவிகித கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை ஒரு ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க அழுத்தம் கொடுத்து யுக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நினைக்கிறது.
டிரம்ப்பின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்ட கசப்புத்தன்மை பற்றி சீன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூலை 13 அன்று சீன செய்தி ஊடகமான குவான்சாவில் எழுதியுள்ள கட்டுரையில் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜீ சாவோ தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா, இந்தியாவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானைப் பயன்படுத்தும் உத்தியை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே “வற்புறுத்தப்பட்ட இணக்கத்தை” ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முன்னணி விமர்சகரான பேராசிரியர் ஜின் கன்ரோங் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் சமீபத்தில் மேம்பட்டுள்ளன” என்றார்.
ஜூன் மாதம் கனடாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபோது பிரதமர் நரேந்திர மோதி டிரம்பை சந்திக்க தவறினார். அதன் பிறகு டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்ததால் இந்தியா மேலும் ஏமாற்றமடைந்தது.
பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றைத் தேடுகின்றவா?
பட மூலாதாரம், Getty Images
சீனா மற்றும் ரஷ்யா உடனான அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக உள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இருநாடுகளும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை நிராகரிப்பது பற்றியும் பல்முனை உலகை உருவாக்குவது பற்றியும் பேசுகின்றன
உலகில் நீண்ட காலமாக அமெரிக்காவின் நாணயமான டாலரின் ஆதிக்கத்திற்கு சவால்விட இருநாடுகளும் முயற்சி செய்வதற்கு இது தான் காரணம்
2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் தான் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
சீனா ஏற்கெனவே ரஷ்யாவுடன் யுவானில் தான் வர்த்தகம் செய்து வருகிறது. ரஷ்யாவும் அதே தான் செய்து வருகிறது, ஏனென்றால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கியமான சர்வதேச பேமெண்ட் அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து விலக்கியுள்ளன.
பிபிசியின் 2024ஆம் ஆண்டின் பிபிசி இந்தியின் செய்தியின்படி வெளிநாட்டு விவகார வல்லுநர் மற்றும் தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூடின் தலைவருமான ரபிந்திர சச்தேவ் கூறுகையில், “பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சித்து வருகின்றன. அவர்களால் மாற்று நாணயத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன”
“ஸ்விஃப்ட் பேங்கின் இண்டர்நேஷனல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. எந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அவை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படும்” என்றார்.
“ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைப் பார்க்கையில், தங்களுடைய வங்கிகளும் எதிர்காலத்தில் முடக்கப்படலாம் என பிரிக்ஸ் நாடுகள் அச்சம் கொள்கின்றன. இதனால் அவை ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நிஜமாகவே டாலரின் மாற்றுக்கான தேடல் உள்ளதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரபிந்திர சச்தேவ், “பிரிக்ஸ் நாடுகள் அத்தகைய ஒன்றை திட்டமிட்டு வருகின்றன, ஆனால் அது கூடிய விரைவில் நடக்கப்போவதில்லை. எனினும் சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்லன. பிரேசில் உடன் யுவானில் வர்த்தகம் செய்கிறது சீனா. சவுதி அரேபியா உடன் நாணயம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது சீனா, இந்தியா ரஷ்யாவுடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தொடங்கிவிட்டன” எனத் தெரிவித்தார்.
ஆனால் டாலருக்கு எதிராக வேறு நாணயத்தை நிறுத்துவது என்பது அசாத்தியமானது என ரபிந்திர சச்தேவ் நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு