Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வர்த்தமானி இரத்து செய்யப்படாதவிடத்து இதுவரை விடுவிக்கப்பட நிலங்களும் சட்டபூர்வமாக மக்களுக்குரியதாக இல்லாது போகும் அபாயம் உள்ளதாகவும்; எச்சரிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று யாழ்.நகரில் நடத்தப்பட்டிருந்தது.
இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் கூறுகின்றது. ஆனால் யாழ் மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர் நிலம் என்று கூறுகின்றது. அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் கூறக் கூடாது.
அதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் கூறுகின்றது.
வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.
இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மட்டுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்குமெனவும் போராட்ட குழு அறிவித்துள்ளது.