Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது , இளைஞன் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியை சேர்ந்த யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சக வீரர்களுடன் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த வேளை , கோல் காப்பாளரான இளைஞன் மீது கம்பம் சரிந்து விழுந்துள்ளது.
அதில் படுகாயமடைந்த இளைஞனை மைதானத்தில் நின்றவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்