Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகியோருக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் பிரதிவாதிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த நீதிமன்றத் திகதியில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.