பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இத்தொடர், ஆகஸ்டு 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதைத்தொடர்ந்து நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் மோதல், அதை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

இந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் சொன்னது, உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழு பயணம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் உள்பட 8 பிரச்சினைகளை எழுப்புவது என்று இந்தியா கூட்ணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதேநேரத்தில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.