இலங்கை படைகளால் திருமலையின் அரங்கேற்றப்பட்ட சம்பூர் மனிதப் புதைகுழி 35 வருடங்களின் பின்னராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து, கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்றையதினம் மீள ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வகையில்  செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதைக்கப்பட்ட நிலையிலுள்ள உடலங்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.