Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற தேசிய முன்பிள்ளை பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளில் கலந்து கொண்ட போதே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கைப்பேசி பயன்பாடு இளம் பராயத்தினர் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை இதன்போது எடுத்துரைத்தார்.
அத்துடன், ஆரம்ப வயதுகளில் திரை செயற்பாட்டை விட செயலில் கற்றல், சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் சிறுவர்களின் திறமைகள் மற்றும் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.