தமது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்; 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. 

பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில் தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக அரச அதிகாரிகள் உட்பட மக்கள் வரை ஒடுக்கப்படுகின்றனர். 

அரிசி மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும் எனக்கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். 

ஆனால் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. இதுகூட விவசாயிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையாகும் – என்றார்.