Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் தீர்மானம் ஒன்றை முன்வைத்தார்.
குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னியசிங்கம் பிரபாகரன்,
குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் வழங்கிய தவிசாளர் குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலவசமாகவே முன்னிலையாவர் என சபையில் வாக்குறுதியை வழங்கினார்.