யாழ்ப்பாணத்தில் தென்னைப் பயிர்ச்  செய்கை  சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து விசிறும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து தென்னை மரங்களுக்கும் மருந்து விசிறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் வெள்ளிக்கிழமையும் மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதால் மக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளை எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில்  உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் (0779074230) 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் (0778222560) 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலும் (0771976959) செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.