Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை.”
தொடக்க விழா 19.07. 2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாட, தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
……………………………….
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம் – எங்கள்
கலையாக்கத் திறன்களைக் கொண்டாடுவோம்
வண்ண வண்ண வடிவங்கள் ஆக்கிடுவோம் – எங்கள்
எண்ணம் போல் அழகாக அணிந்திடுவோம்
முன்னோர் தந்த முதுசங்கள் போற்றிடுவோம் – நாங்கள்
பின்னோர் காலம் பெருமை கொள்ள ஆக்கம் செய்வோம்
இன்றைக்கும் என்றைக்கும் எங்கள் கலைகள்
எவருமே வியந்திட எடுத்துச் செல்வோம்
உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை தரும் – எங்கள்
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம்
கலையும் வாழ்வும் இணைந்து செல்லும் – எங்கள்
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம்
எங்கள் கலை எங்கள் கலை கைத்தறிக்கலை
எல்லோரையும் தேட வைக்கும் கைத்தறிக்கலை
எங்கள் கைத்தறிக்கலை
எங்கள் கையில் விளைகின்ற அழகுக்கலை
எவருமே விரும்பிட விளைந்த கலை
ஆடை செய்வோம் அணிகள் செய்வோம் – அழகழாய்
நாங்கள் பயன்படு பொருள்களும் செய்து கொள்வோம்
கைத்தறிக் கலையினை கையில் எடுப்போம் – அந்த
கலை தந்த வாழ்வினில் மேன்மை கொள்ளுவோம்.
பேராசிரியர். சி.ஜெயசங்கர்
14.07.2025