இந்தியாவில் டெஸ்லா காரின் விலை, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட முழு விவரம்

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images

படக்குறிப்பு, டெஸ்லா கார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று இந்தியாவில் தனது காரை அறிமுகப்படுத்தியது.

டெஸ்லா தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. விரைவில் தலைநகர் டெல்லியிலும் ஒரு ஷோரூம் திறக்கப்படும் என்று டெஸ்லாவின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் இசபெல் ஃபேன் தெரிவித்ததாக சிபிஎன்சி செய்தி கூறுகிறது.

மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சிறிது காலமாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிகப்படியான இறக்குமதி வரி விதிக்கப்படுவதை ஈலோன் மஸ்க் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்தச் சூழலில், இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்துள்ளதை உலக ஆட்டோமொபைல் துறை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. டெஸ்லா இந்தியாவில் கால் பதித்திருப்பது தொடர்பான முக்கிய கேள்விகளுக்கான எளிய பதில்களைக் காணலாம்.

காரின் விலை எவ்வளவு?

பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் (Y) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதுடெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் (Y) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் ஆரம்ப விலை 70 ஆயிரம் டாலர்கள் . அதாவது இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம் ரூபாய்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்யலாம். இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அந்த கார் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டு வர நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த மஸ்க், இந்தியாவில் ஒரு டெஸ்லா தொழிற்சாலையையும் அமைக்க திட்டமிட்டிருந்தார்.

டெஸ்லாவின் மாடல் ஒய் (Y) ரியர்-வீல் டிரைவ் விலை சுமார் ரூ.60 லட்சமாகவும், மாடல் ஒய் (Y) லாங்-ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் விலை ரூ.68 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லாவின் தானியங்கி (“full self-driving”) அம்சம் கொண்ட காரை வாங்க கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். எதிர் காலத்தில் இந்த ரக காரில் வரும் மேம்பாடுகள் (Update), குறைவான மனித தலையீடே போதும் என்ற நிலையை உருவாக்கும் என்று டெஸ்லா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

டெஸ்லா காரின் விலை இந்தியாவில் அதிகமாக இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் டெஸ்லா காரின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.இந்தியாவில் சுமார் 60 லட்சம் ரூபாய் விலையில் இருக்கும் அதே மாடலின் விலை அமெரிக்காவில் 44,990 டாலராக உள்ளது. (சுமார் ரூ.39 லட்சம்)

அதே சமயம், சீனாவில் 36,700 டாலராகவும் (அதாவது சுமார் ரூ.32 லட்சம்) ஜெர்மனியில் 45,970 டாலராகவும் ( அதாவது சுமார் ரூ.39 லட்சத்து 50 ஆயிரம்) உள்ளது.

அப்படியானால் இந்தியாவில் அதன் விலை ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு விடும் கார்களுக்கு கிட்டத்தட்ட 100 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அதனால்தான் இந்தியாவில் விற்கப்படும் டெஸ்லா நிறுவனத்தின் கார்களின் விலை மிக அதிகமாக உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா, இந்தியாவில் கிளையை திறக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், “மின்சார வாகனங்களுக்கு 70% இறக்குமதி வரியும், 30% ஆடம்பர வரியும் இருப்பதால், இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மிகவும் கவனமாக செயல்படும்” என்றும் அவர் கூறினார்.

அதிக வரி விதிப்பின் காரணமாக, இந்தியாவில் டெஸ்லா தனது கார்களின் விலையையும் மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டியுள்ளது.

டெஸ்லாவுக்கு எந்தெந்த நிறுவனங்கள் போட்டி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்லா டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற உள்நாட்டு மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டியிடாது என்கிறார்கள் நிபுணர்கள்.இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் பிரீமியம் மின்சார கார்களை இலக்காகக் கொண்டு டெஸ்லா செயல்படுகிறது. இது இந்தியாவின் மொத்த ஆட்டோமொபைல் சந்தையில் 4 சதவீதம்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற இந்திய மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களுடன் டெஸ்லாவுக்கு போட்டி இருக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம், பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் கார்களுடன் டெஸ்லா போட்டியிடும்.

அதிகப்படியான உற்பத்தி திறன் மற்றும் விற்பனை குறைந்து வருவது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ள டெஸ்லா, அதிக வரி செலுத்த வேண்டியிருந்தாலும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் உத்தியைக் கடைப்பிடித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வருகின்றன.

“டெஸ்லா வெகுஜன சந்தையை பாதிக்குமா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்பது தான் அதற்கான பதிலாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் இந்த விலையில் பத்தில் ஒரு பங்கு விலையில் இருக்கலாம்” என்கிறார் சிஎன்பிசியின் இன்சைட் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய ஃப்ரோஸ்ட் & சல்லிவனின் மொபிலிட்டி துறையின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவைப் பிரிவுத் தலைவரான விவேக் வைத்யா.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த விலை இந்திய மக்களுக்கு முற்றிலும் எட்டாதவை என்று நான் கூறமாட்டேன், ஏனென்றால் இந்தியாவில் ஒவ்வொரு விலை பிரிவிலும் கார்களை வாங்கும் மக்கள் உள்ளனர்” என்றும் கூறினார்.

மும்பையில் டெஸ்லாவால் காட்சிப்படுத்தப்பட்ட கார்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை, மேலும் இந்த கார்கள் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் இந்தியாவிற்குத் தேவையான வலது பக்க ஸ்டீயரிங் கொண்ட வாகனங்களை உருவாக்குவதில்லை.

செவ்வாய்க்கிழமை, டெஸ்லாவின் ஷோரூம் திறந்திருக்கும் மும்பை அலுவலக வளாகத்திற்கு வெளியே ஒரு பெரிய ஊடகக் கூட்டம் காத்திருந்தது.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இதன் தொடக்க விழாவிற்கு வந்தார்.

விழாவில் பேசிய அவர், “எதிர்காலத்தில், இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியை நாங்கள் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறோம், சரியான நேரத்தில் டெஸ்லா நிச்சயமாக இதைப் பற்றி யோசிக்கும் என நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

இந்தப் போட்டியை நேர்மறையான முறையில் எடுத்துக் கொண்ட ஆனந்த் மஹிந்திரா, இது புதுமைகளை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

“ஈலோன் மஸ்க்கும், டெஸ்லாவும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தை இப்போது மேலும் உற்சாகமாகியுள்ளது. போட்டி புதுமையை ஊக்குவிக்கிறது. நீண்ட பயணம் நம் முன்னே உள்ளது. சார்ஜிங் நிலையத்தில் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.” என்று ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

டெஸ்லா கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க், ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தொழிற்சாலையில் செலவிட்டார்.2018 ஆம் ஆண்டில், டெஸ்லா அதன் மலிவு விலை மின்சார காரான மாடல் 3 இன் உற்பத்தியை விரிவுபடுத்தியது.

ஆனால் இதற்கு கடுமையான பிரச்னைகள் இருந்தன.

கஜானா ஒருபுறம் வேகமாக காலியாகி வந்தது, நிறுவனம் நெருக்கடியில் சிக்கியிருந்தது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஈலோன் மஸ்க், ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தொழிற்சாலையில் செலவிட்டார்.

பின்னர் ஒரு நேர்காணலில், ஈலோன் மஸ்க் டெஸ்லா நிறுவனம் முடிவுக்கு வரக்கூடும் என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால் இரண்டே வருடங்களில் நிலைமை மாறியது. அந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவே இல்லை. ஆனால், நிறுவனத்தின் பங்குகள் வியக்கத்தக்க வகையில் 50%க்கும் மேல் உயர்ந்தன.

2020 ஆம் ஆண்டில் நிறுவனம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளுக்கு லாபம் ஈட்டியது .

கொரோனா தொற்றுநோய் காலத்தில், கார் நிறுவனங்கள் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் போராடிய போது, டெஸ்லா குறிப்பிடத்தகுந்த லாபத்தை ஈட்டி வந்தது .

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2021 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.2 டிரில்லியன் டாலரை எட்டியது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், அமேசான் ஆகியவற்றிற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா மாறியது .

கார் நிறுவனங்களில், 1 டிரில்லியன் எனும் அளவை மிக வேகமாக எட்டிய டெஸ்லா, பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாகவும் மாறியது.

உற்பத்தியைப் பொறுத்தவரை, டொயோட்டா, வோக்ஸ்வாகன், ஃபோர்டு மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களை விட, டெஸ்லா மிகவும் பின்தங்கியிருந்தது .

ஆனால் அதன் மதிப்பு டொயோட்டா, வோக்ஸ்வாகன் மற்றும் ஹோண்டாவின் ஒருங்கிணைந்த மதிப்பை விட அதிகமாகிவிட்டது .

அதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்படும் நிலையில் இருந்த டெஸ்லா, உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமாக மாறியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு