சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சட்டத்தரணி இதற்கு முன்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.