டிரம்பின் புதிய வரி மிரட்டல் ரஷ்யாவுக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக நிம்மதி தந்துள்ளதா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனுடனான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.எழுதியவர், ஸ்டீவ் ரேசென்பெர்க்பதவி, பிபிசி ரஷ்ய ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளின் நிதியாதாரத்தில் யுக்ரேனுக்கு புதிதாக ஆயுதங்களை அனுப்பி வைப்பது குறித்த அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டார். அத்துடன், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கான நிதியாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், புதிய வரி விதிப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், இது ரஷ்யாவின் பங்குச் சந்தையில் எப்படி எதிரொலித்தது? அதன் பங்குச் சந்தை 2.7% அளவுக்கு வளர்ச்சி கண்டது.

ஏனெனில், அதிபர் டிரம்பிடமிருந்து ரஷ்யா இன்னும் கடினமான பொருளாதார தடைகளை எதிர்பார்த்திருந்தது.

“யுக்ரேன் தொடர்பாக மற்றுமொரு புதிய மோதலை நோக்கி ரஷ்யாவும் அமெரிக்காவும் நெருங்கிச் செல்கிறது,” என மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் எனும் சிறு பத்திரிகை திங்கட்கிழமை எச்சரித்திருந்தது.

“திங்கட்கிழமை டிரம்ப் அளித்த ஆச்சர்யம் எங்கள் நாட்டுக்கு நல்லதல்ல.”

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அது “மகிழ்ச்சியானதாக” இருக்காது. ஆனால், தன் வர்த்தக கூட்டாளிகள் மீதான வரிவிதிப்புகள் இன்னும் 50 நாட்களுக்கு நடைமுறைக்கு வராது என்பதால் ரஷ்யா நிம்மதி அடையும்.

பட மூலாதாரம், Getty Images

“ரஷ்யாவுக்கு அதிக கால அவகாசம் உள்ளது”

எனவே, டிரம்பின் அறிவிப்பை எதிர்கொள்ளும் விதமான முன்மொழிவுகளை ரஷ்யா உருவாக்குவதற்கு அதிக நேரம் இருக்கும். மேற்கொண்டு பொருளாதார தடைகள் செயல்படுத்தப்படுவதை கால தாமதம் செய்ய ரஷ்யாவால் முடியும்.

எனினும், டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ரஷ்யா மீதான கடுமையான அணுகுமுறையை எதிரொலிக்கிறது.

யுக்ரேன் போர் தொடர்பான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதின் தயக்கம் காட்டுவதால் எழுந்த விரக்தியையும் பிரதிபலிக்கிறது.

ரஷ்யாவின் அணுகுமுறை

ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், யுக்ரேனில் ரஷ்யாவின் போரை நிறுத்துவது தன்னுடைய வெளியுறவு கொள்கைகளுள் முன்னுரிமையான விவகாரங்களுள் ஒன்று என குறிப்பிட்டார்.

ஆனால், இந்த போர் தொடர்பாக பல மாதங்களாக “ஆம், ஆனால்…” என்ற விதத்திலேயே ரஷ்யாவின் பதில் இருந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் டிரம்ப் விரிவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் முன்மொழிந்த போது அதை ரஷ்யா வரவேற்றது. ஆனால், யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் அளித்து வரும் ராணுவ உதவி மற்றும் உளவு தகவல்களை பகிர்தலை நிறுத்த வேண்டும் எனவும், யுக்ரேன் தன் ராணுவ அணிதிரட்டலை நிறுத்த வேண்டும் எனவும் ரஷ்யா கூறியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கிஅமைதி ஏற்பட விரும்புவதாக ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், போருக்கான “மூல காரணங்கள்” முதலில் தீர்க்கப்பட வேண்டும். யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளை விட இந்த விவகாரத்தை ரஷ்யா மிகவும் வித்தியாசமாக பார்க்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்புக்கு வரும் வெளிப்புற அச்சுறுத்தல்களின் விளைவாக இந்த போர் ஏற்பட்டதாக ரஷ்யா வாதிடுகிறது. அதாவது, யுக்ரேன், நேட்டோ அமைப்பு, ‘மேற்கு நாடுகளின் கூட்டணியை’ ரஷ்யா இவ்வாறு குறிப்பிடுகிறது.

ஆனால், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரஷ்யா மீது யுக்ரேனோ, நேட்டோவோ அல்லது மேற்கு நாடுகளோ படையெடுக்கவில்லை. ரஷ்யா தான் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியது. இதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் மிகப்பெரும் தரைவழியிலான போர் தூண்டப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்யா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.சிறிது காலத்துக்கு “ஆம், ஆனால்…” எனும் ரஷ்யாவின் அணுகுமுறையால், போரை தொடர்ந்து நடத்திக்கொண்டே அமெரிக்காவின் இன்னும் கூடுதல் தடைகளை அதனால் தவிர்க்க முடிந்தது. ரஷ்யாவுடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் யுக்ரேனுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆர்வமாக இருந்த டிரம்ப் நிர்வாகம், ரஷ்ய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எதிர்மறை விளைவுகளை விட நேர்மறையான முடிவுகளுக்கே முன்னுரிமை அளித்தது.

“ஆம், ஆனால்…” என்ற அணுகுமுறை மூலம் ரஷ்யா காலதாமதம் செய்வதாக ரஷ்யாவை விமர்சிப்பவர்கள் எச்சரித்தனர். ஆனால், அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த புதினை வலியுறுத்துவதற்கு தன்னால் ஒரு வழியை கண்டுபிடிக்க முடியும் என டிரம்ப் நம்பினார்.

அவசரம் காட்டாத புதின்

ஆனால், அதை செய்வதற்கு ரஷ்ய அதிபர் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. போர்க்களத்தில் தங்கள் கை ஓங்கியிருப்பதாக ரஷ்யா நம்பியது. தங்களுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதி ஒப்பந்தம் உருவாக வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது.

அந்த நிபந்தனைகளுள் யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதுவும் ஒன்றாகும். டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு மூலம் அது நடக்காது என்பது தெளிவாகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.விளாடிமிர் புதினின் செயல்பாடுகள் “தனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், ஏமாற்றம் என்பது இருதரப்பிலும் உள்ளது. அமெரிக்க அதிபர் மீது ரஷ்யாவும் ஏமாற்றத்தைக் கொண்டுள்ளது. திங்கட்கிழமை மோஸ்கோவாஸ்கி கோம்சோமோலெட்ஸ் பத்திரிகையில், “[டிரம்ப்] மிகப்பெரிய மாயைகளைக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையானது. அவர் அதிகமாக பேசக்கூடியவர்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு