மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருக்கைலாச வாகனம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வள்ளி, தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த மாவை கந்தன், கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

கடந்த 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி அன்றும் மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.