கர்நாடகா: மலைக் குகையில் குழந்தைகளுடன் வசித்தது ஏன்? ரஷ்ய பெண் கூறியது என்ன?கர்நாடகா: மலைக் குகையில் குழந்தைகளுடன் வசித்தது ஏன்? ரஷ்ய பெண் கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரோந்துப் பணியில் இருந்த போலீசார், ஒரு மலை அடிவாரத்தில் சுமார் 700 முதல் 800 மீட்டர் தூரத்தில் உள்ள குகை அருகே சில உடைகள் தொங்கிக்கொண்டிருப்பதை கவனித்தனர். அதன் மூலம் அந்த பகுதியில் ஆட்கள் வசிப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

அவர்கள் அந்த பகுதிக்கு அருகில் சென்றபோது வெளிநாட்டைச் சேர்ந்த குழந்தை குகையிலிருந்து வெளியே ஓடி வந்தது. இதைப்பார்த்த காவலர்கள் ஆச்சரியமடைந்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு