அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

50 நாட்களுக்குள் உக்ரைன் போர் நிறுத்தத்தை எட்டவில்லை என்றால் வரிகளை விதிப்பேன் என்று அவர் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆனால் அவரை இன்னும் கையாள்வதை முடிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு ஊடகங்களுடனான சிறப்பு தொலைபேசி மாநாட்டில் தெரிவித்தார். 

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் இவ்வாறு கூறினார். 

50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மற்றொரு வெளிநாட்டு ஊடக சந்திப்பில், டிரம்ப் புடின் மீதான தனது விரக்தியை உறுதிப்படுத்தினார்.  

நேட்டோ நாடுகள் மூலம் உக்ரைனுக்கு மிக உயர்ந்த அளவிலான ஆயுதங்கள் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவுவதற்காக பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்புவதாகவும் அவர் நேற்று டிரம்ப் அறிவித்தார்.

இருப்பினும், உக்ரைனுக்கு எத்தனை ஏவுகணைகள் வழங்கப்படும் என்பதை அமெரிக்கா இன்னும் அறிவிக்கவில்லை. வான் பாதுக்காப்பு அமைப்புக்கள் மற்றும் ஏவுகணைகளை  நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் யேர்மனி போன்ற சில  நாடுகள் சில உடனடியாக பணம் செலுத்தி ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.