Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறியரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் ஹட்விக் விமான நிலையத்தை நோக்கி, 242 பேருடன் கடந்த மாதம் 12 ஆம் திகதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 – 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியது.
இதில் ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்திற்கு எரிபொருள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறி விபத்தில் சிக்கி உள்ளது.
ஈஸி ஜெட் நிறுவனத்தின் இந்த சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த சிறிய விமானம் 12 மீட்டர் நீளம் கொண்டது.ஒவ்வொரு வாரமும் 20 வழித்தடங்களில் 122 விமானங்களை ஈஸி ஜெட் இயக்குகிறது.
விபத்தைத் தொடர்ந்து, பாரிஸ், அலிகாண்டே, பாரோ, பால்மா, மல்லோர்கா ஆகிய இடங்களுக்கான விமானங்களை ஈஸி ஜெட் ரத்து செய்துள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து விபரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.