Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025’ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி, தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், விவசாய பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதேவேளை தென்னை பயிர்ச் செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் சாவகச்சேரி பிதேச செயலர் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளது. அதனால் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் 0776116551 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலும் (0774409933) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் (0779074230) 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலும் (0778222560) 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலும் (0771976959) செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.