Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்தொழிலார்களை கைது செய்தனர்.அதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர், அதனை அடுத்து கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.