பழம்பெரும் நடிகை சரோஜா தேவி  இன்று (ஜூலை 14) காலையில்  தனது 87 வது வயதில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அவா்    சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

கடந்த ஐம்பது ஆண்டு ண்டு காலமாக  தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிககையாக வலம் வந்த  சரோஜாதேவி  200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திரைப்படத்துறையினரால் ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரசுவதி’ போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படும் அ வர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளதுடன்  வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதினையும் பெற்றிருந்தாா்.

ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955ஆம் ஆண்டு அறிமுகமான சரோஜாதேவிக்கு அந்தப் படம்   மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன்  அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.

‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில்    சிறிய வேடத்தில் அறிமுகமான ரோஜாதேவி ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான கல்யாணப் பரிசு படத்தில் நடித்ததன் மூலமாக பெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

சரோஜாதேவி திருமணத்துக்குப் பின்னரும் கணவர் பி.கே.ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.  சரோஜா தேவி, எம்ஜிஆருடன் 26 படங்களிலும, சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.