Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறது. தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்படதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்பட்டு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்புள்ளன.
இது மிகப்பெரும் மனித உயிர் சார்ந்த விடையமாகும். எமது ஒன்றியம் கடந்த காலம் முதற் கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுதுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு என்ற ரீதியில் தற்போதைய பேசுபொதுளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொடு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்படு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார்.