ஆப்கனில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் புதிய உத்தி காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான்: கடும் வெயிலைச் சமாளிக்க புதிய யுத்தியைக் கையாளும் டாக்ஸி ஓட்டுநர்கள்ஆப்கனில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் புதிய உத்தி

57 நிமிடங்களுக்கு முன்னர்

கடுமையான வெப்பத்தைத் தாங்க ஆப்கானிய டாக்ஸி ஓட்டுநர்கள் பிரத்யேக கூலர்களை பயன்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெப்பநிலை பெரும்பாலும் 40 செல்சியஸ்-க்கும் அதிகமாக உயரும். இதனால் கார் ஏ.சி யூனிட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. அவற்றை பழுதுபார்க்கும் செலவும் அதிகம்.

இப்போது இந்த டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு புதிய தீர்வை முன்வைத்துள்ளனர். காரின் மேற்புறத்தில் ஒரு எளிய கூலரை இணைக்கிறார்கள். பின் அதன் எக்ஸ்ஹாஸ்ட் வென்ட்-ஐ ஜன்னல் வழியாக இணைக்கிறார்கள்.

“இது வழக்கமான ஏ.சி-யை விட சிறப்பாக செயல்படுகிறது. ஏ.சி-க்கள் காரின் முன்பக்கத்தை மட்டுமே குளிர்விக்கின்றன. இந்தக் குளிர்விப்பான் கார் முழுவதும் காற்றைப் பரப்புகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரை நிரப்புவதுதான் ஒரே பிரச்னை. ஆனால் இது மிகவும் உதவியாக இருக்கிறது.” என டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகிறார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு