ஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடுகாணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: ஆரம்ப விசாரணை அறிக்கை வெளியீடுஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடு

54 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த மாதம் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த ஆரம்ப விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் ‘கட்-ஆஃப்’ நிலைக்கு சென்றுவிட்டது. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.

விமானத்தை இயக்கும் முன்பகுதியில் ஒரு விமானி மற்றவரிடம், “ஏன் அது கட்-ஆஃப் நிலையில் இருக்கிறது?” என்ற கேள்வியை எழுப்பியது பதிவாகியுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகிறார். எந்த குரல் எந்த விமானியுடையது என்பது அறிக்கையில் தெளிவாக இல்லை.

பயணத்தின் போது, துணை விமானி விமானத்தை ஓட்டிச் சென்றார், கேப்டன் கண்காணித்து வந்தார்.

ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், விசாரணை அமைப்புகளுடன் நிறுவனம் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த விபத்தில், விமானத்தில் இருந்தவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு