Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பெண்களை ‘பணத்தாசை பிடித்தவர்களாக’ சித்தரித்து கடும் எதிர்ப்பை சந்தித்த வீடியோ கேம்
பட மூலாதாரம், Qianfang Studio
படக்குறிப்பு, எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து விளையாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளதுஎழுதியவர், கெல்லி என்ஜிபதவி, பிபிசி நியூஸ்எழுதியவர், ஏபெல் யுபதவி, பிபிசி சீன சேவை 17 நிமிடங்களுக்கு முன்னர்
“அவன் ஒரு நாயை விட அதிக கீழ்படிதல் உள்ளவனாக இருக்கிறான்… இதே போன்ற முட்டாள்கள் கூடுதலாக வந்தால் எவ்வளவு நல்லது” என சீனாவில் பாலின பாகுபாடு குறித்த விவாதத்தை தூண்டியுள்ள ஒரு புதிய வீடியோ கேமில் ஒரு பெண் கூறுகிறார்.
ரிவெஞ்ச் ஆன் கோல்ட் டிக்கர்ஸ் என்ற இந்த விளையாட்டில் சூழ்ச்சியான பெண்களால் பணத்துக்காக உறவுக்குள் ஈர்க்கப்படும் ஆண்கள்தான் கதாநாயகர்கள் – இந்த சூழ்நிலைக்கு ஆண் எவ்வாறு பதில்வினையாற்றுகிறான் என்பது கதையின் போக்கை தீர்மானிக்கிறது.
இது ஜூன் மாதம் வெளியான சில மணி நேரங்களில் கேமிங் தளமான ஸ்டீமின் விற்பனை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, ஆனால் விரைவில் சர்ச்சை எழுந்தது.
சிலர் இது பெண்களை இழிவுபடுத்தி ஒரே மாதிரியாக உருவகப்படுத்தும் கருத்துகளை வலுப்படுத்துவதாக கடுமையாக விமர்சித்தனர், அதே நேரம் இந்த விளையாட்டு காதல் மோசடிகள் குறித்து மக்களை எச்சரிக்கின்றன என ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
விமர்சனம் மிகவும் சூடாக இருந்ததால் விளையாட்டை உருவாக்கியவர் சட்டென்று அடுத்த நாளே அதன் பெயரை எமோஷனல் ஆன்டி-ஃப்ராட் சிமுலேட்டர் என மாற்றினர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் பாதிப்பை சரிசெய்ய இந்த நடவடிக்கை போதுமானதாக இருக்கவில்லை. விளையாட்டின் முதன்மை இயக்குநரான ஹாங்காங்கை சேர்ந்த திரைப்பட இயக்குநர் மார்க் ஹூ, தற்போது பல சீன சமூக ஊடக தளங்களில் தடை செய்யப்பட்டுள்ளார்.
தாங்கள் பெண்களை குறிவைக்கவில்லை என விளையாட்டை உருவாக்கியவர்கள் வலியுறுத்துகின்றனர் – மாறாக, “உணர்வுப்பூர்வமான எல்லைகள் மற்றும் நவீன டேட்டிங்கில் உள்ள தெளிவற்ற விவகாரங்கள் குறித்து திறந்த உரையாடலை” ஊக்குவிக்க விரும்பியதாக கூறினர்.
இந்த விளையாட்டை முயற்சித்துப் பார்த்து அது மிகவும் புண்படுத்துவதாக இருப்பதாக கண்ட சு யிகுன் இந்த வாதத்தை நிராகரிக்கிறார்.
இதை “விவாதங்களையும் பிளவுகளையும் தூண்டும் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் வளரும் ஒரு சிறந்த வணிக மாதிரி” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
“கோல்ட் டிக்கர்” என்ற சொல்லே பெண்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாக இருப்பதாக அவரைப் போன்ற விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“இது பெண்களுக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு முத்திரை,” என்று சு யிகுன் கூறுகிறார். “இதுபோன்ற பாலின பாகுபாடு நகைச்சுவைகளும் இழிவான சொற்களும் நம் அன்றாட மொழியில் இடம்பெற்றுவிட்டன.”
“உங்களுக்கு ஒரு பணக்கார காதலர் இருந்தால் நீங்கள் கோல்ட் டிக்கர் என அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் அழகாகத் தோற்றமளிக்க முயற்சித்தால், நீங்கள் கோல்ட் டிக்கர் என்று அழைக்கப்படுகிறீர்கள்… சில சமயங்களில் யாரிடமிருந்து ஒரு பானத்தை ஏற்றுக்கொண்டாலே உங்களுக்கு இந்த முத்திரை குத்தப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், Qianfang Studio
படக்குறிப்பு, இந்த வீடியோ கேமில் ஒரு பெண்,”ஒரு ஆண் உன்னை எவ்வளவு காதலிக்கிறான் என தெரிந்துகொள்ளவேண்டுமா? அவன் எவ்வளவு செலவு செய்கிறான் எனப் பார்’ என கூறுகிறார்இருப்பினும், இந்த விளையாட்டை விளையாடும் சிலர் இந்த விமர்சனங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கருதுகின்றனர்.
“இந்த விளையாட்டு எல்லா பெண்களும் கோல்ட் டிக்கர்ஸ் என்று கூறவில்லை… இது எந்த பாலினத்தையும் குறிவைப்பதாக நான் கருதவில்லை,” என்று பிபிசியிடம் புனைப்பெயரில் பேசிய 31 வயது ஜுவாங் மெங்ஷெங் கூறுகிறார். “பெண்களும் ஆண்களும் என இருதரப்பினரும் கோல்ட் டிக்கர்களாக இருக்கலாம்.”
இருப்பினும், விளையாட்டில் உள்ள அனைத்து “கோல்ட் டிக்கர்ஸ்” பாத்திரங்களும் பெண்களாகவே உள்ளனர். ஒரு இளமையான ஆன்லைன் இன்ஃப்ளூயன்ஸரில் இருந்து முனைப்பான தொழில்முனைவோர் வரை, அனைவரும் ஆண்கள் தங்கள் மீது பணத்தையும் பரிசுகளையும் வாரியிறைக்க சதி செய்வதாக சித்தரிக்கப்படுகின்றனர்.
“ஒரு ஆண் உங்களை காதலிக்கிறானா என தெரிந்துகொள்ளவேண்டுமா? அவன் எவ்வளவு செலவு செய்கிறான் என பாருங்கள்,” என அந்த கதாபாத்திரங்களில் ஒன்று சொல்கிறது.
உள்ளூர் ஊடகங்களைக் கூட இந்த விளையாட்டு பிளவுபடுத்திவிட்டது. மத்திய ஹூபெய் மாகாணத்தை சேர்ந்த ஒரு செய்தித்தாள், இந்த விளையாட்டு ஒரு பாலினத்தையே மோசடிக்காரர்களாக முத்திரை குத்துகிறது என கூறியுள்ளது.
ஆனால் தேசிய மோசடி எதிர்ப்பு மையத்தின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் யுவான் ($279 மில்லியன்),காதல் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுவதை மேற்கோள் காட்டி பீஜிங் யூத் டெய்லி செய்தித்தாள், இந்த விளையாட்டின் “படைப்பாற்றலை” பாராட்டியிருக்கிறது.
“உணர்ச்சிகளை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அது ஒரு தலையங்கத்தில் கூறியது.
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் இந்த விளையாட்டின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இது இப்போது சீனாவின் கணினி(பிசி) தளத்திற்கான முதல் பத்து விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது, இதுவரை மிகவும் வெற்றிகரமான சீன விளையாட்டாகக் கருதப்படும் ‘பிளாக் மித்: வுகாங்’-ஐ கூட மிஞ்சியுள்ளது.
“இதைப் பற்றி மக்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் கோல்ட் டிக்கர் இல்லையென்றால், இந்த விளையாட்டால் தாக்கப்பட்டதாக ஏன் உணர வேண்டும்?” என்று 28 வயது ஆண் ஒருவர் கூறுகிறார்.
“இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் மிகவும் தைரியமானவர்கள் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பிரச்னைகள் [உணர்ச்சி மோசடி போன்றவை] சீனாவில் போதுமான அளவு விவாதிக்கப்படுவதில்லை.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த விளையாட்டில் கோல்ட் டிக்கர்களாக இருப்பவர்கள் அனைவருமே பெண்கள் என்பதே இது பாலின பாகுபாடுள்ள விளையாட்டு என்பதற்கு சான்று என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்இந்த விளையாட்டு கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட -இணையத்தில் “ஃபேட் கேட்” என்று அறியப்பட்ட ஒரு சீனரின் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டது என இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர் கடந்த ஆண்டு ஒரு காதல் தோல்விக்கு பிறகு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மரணம் இணையத்தில் ஒரு தீவிர விவாதத்தை தொடங்கிவைத்தது, அங்கு கோல்ட் டிக்கர் என்ற வார்த்தை தாராளமாக பயன்படுத்தப்பட்டது, சிலர் அவரது முன்னாள் காதலி அவரை பயன்படுத்திக் கொண்டதாகவும் , இது அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால் காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய பெண்கள், இந்த விளையாட்டு சீனாவில் சிக்கலான பாலின வரையறைகளை வலுப்படுத்துவதாகக் கவலை தெரிவித்தனர், அங்கு சமூகம் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றும், ஆண்கள் முதன்மை வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்றும் கருதுகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எனவே, பெண்களுக்கு தொழில்முறை வெற்றியை விட நல்ல மணவாழ்க்கை என்பது பாரம்பரியமாக முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதை ஆதரிக்கின்றன – பெண்களை “நல்ல மனைவிகள் மற்றும் தாய்மார்களாக” இருக்குமாறு அதிபர் ஜி ஜின்பிங் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
பாலின சமத்துவம் கோரி வளர்ந்து வரும் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
“இதைப் போன்ற ஒரு விளையாட்டு வெறுமனே ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே பகைமையை அதிகரிக்கிறது என நான் நினைக்கிறேன்,” என்கிறார் ஆன்லைனில் எதிர்ப்பு வரும் என்ற பயத்தால் பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர்.
“இது தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட ஆண்களை மகிழ்விக்கும் வழிகளை எப்படியாவது கண்டறிய வேண்டிய தாழ்ந்த பாலினமாக பெண்களை மீண்டும் சித்தரித்துள்ளது.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு