Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை நிர்வகிக்க சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர ஜிமெயில் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மின்னஞ்சல்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகவல்பெட்டிக்குள் தேவையின்றி குவிந்து இருக்கும் தகவல்களைப் தனித் தனியே பிரித்து தேவையான மின்னஞ்சல்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த வசதி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மின்னஞ்கல் எனப்படும் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது மின்னஞ்சல் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் மின்னஞ்சல் சேவை வழங்கினாலும் கூகுளின் ஜிமெயில்தான் இதில் முதலிடம் வகிக்கிறது.