Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வருமான வரிக் கணக்கு: யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, செப்டம்பர் 15ஆம் தேதிதான் 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.எழுதியவர், அஜித் காத்விபதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய நிதியாண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அல்லது வரி செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதிதான், 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். இந்தத் தேதிக்கு முன்பாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், சாதாரண குடிமக்களுக்கு, அதாவது வரி செலுத்துவோருக்கு, ஒரு பெரிய நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது.
இப்போது, தங்கள் ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால், ஊழியர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. மற்ற வரி செலுத்துவோருக்கு ரூ. 12 லட்சம் வரை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கு தொடர்பான புதிய விதி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் வருமான வரிக் கணக்கு மற்றும் பான் கார்டு குறித்து சாதாரண வரி செலுத்துவோரிடம் ஏற்கெனவே பல தவறான கருத்துகள் உள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
உதாரணமாக, “யாரெல்லாம் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்? தாக்கல் செய்ய வேண்டியவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருக்க வேண்டும்? வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லையெனில் என்ன நடக்கும்?” போன்ற கேள்விகள் மக்களிடையே உள்ளன.
எனவே, ஐடி ரிட்டன்ஸ் தொடர்பான சில முக்கிய அம்சங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள பட்டயக் கணக்காளர் (CA) மற்றும் வரி நிபுணர் கரீம் லக்கானியுடன் பிபிசி பேசியது.
இது யாருக்கு கட்டாயம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி அடிப்படையில் மிகப்பெரிய நிவாரணத்தை அறிவித்தார்.உங்கள் மொத்த வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்பை’ மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கரீம் லக்கானி.
வரி செலுத்துபவரின் (60 வயதுக்கு உட்பட்ட) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயது வரை) ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.ஒரு சூப்பர் மூத்த குடிமகன் (80 வயதுக்கு மேற்பட்டவர்) தனது ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்உங்கள் மொத்த ஆண்டு வருமானம் (பிரிவு 80இன் கீழ் விலக்குகளைப் பெறுவதற்கு முன்பு) மேலே குறிப்பிடப்பட்ட ‘அடிப்படை விலக்கு வரம்பை’ மீறினால், வருமான வரிக் கணக்கை கட்டயாம் தாக்கல் செய்ய வேண்டும்.அதே நேரத்தில், எந்தவொரு நிறுவனமும் அதன் லாபம் அல்லது நஷ்டத்தை பொருட்படுத்தாமல் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
வரியாகப் பிரிக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கோரிக்கை வைக்கும்போதுநிறுவனம் ஏதேனும் இழப்புகளைச் சந்தித்தால், அவை அடுத்த நிதியாண்டுக்கு முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும்போதுஇந்தியாவில் ஒரு மத அல்லது தொண்டு அறக்கட்டளையின் கீழ் உங்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால்நீங்கள் ஒரு அரசியல் கட்சி வைத்திருந்தால்நீங்கள் நாட்டிற்கு வெளியே சொத்து அல்லது நிதி நலன்களைக் கொண்ட ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் (NRI அல்லது RNOR)நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு கணக்கில் (NRI அல்லது RNOR) கையொப்பமிடும் அதிகாரம் இருந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வேறு சில சூழ்நிலைகள்
கூடுதலாக, உங்கள் வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்புக்கு’ கீழே இருந்தாலும்கூட, நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய சில சூழ்நிலைகள் உள்ளன.
நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்சேமிப்புக் கணக்கில் ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்கோ வெளிநாட்டுப் பயணம் அல்லது சுற்றுலாவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவு செய்திருந்தால்உங்கள் வருடாந்திர மின்சாரக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால்உங்கள் TDS அல்லது TCS (அசலில் இருந்து வசூலிக்கப்படும் வரி) ரூ. 25,000க்கும் அதிகமாக இருந்தால் (மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000).உங்கள் வணிகத்தின் ஆண்டு வருவாய் ரூ. 60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்உங்கள் வணிக வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால்இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம் (சித்தரிப்புப் படம்)பொதுவாக, “தணிக்கை செய்யப்பட வேண்டிய அவசியமற்ற நிறுவனங்களும், வரி செலுத்தும் தனிநபர்களும், தங்கள் வருமான வரிக் கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்கிறார் பட்டயக் கணக்காளர் கரீம் லக்கானி.
மொத்த வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்து, காலக்கெடுவுக்கு பிறகு வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.உங்கள் வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்புக்கு’ கீழே இருக்கும்போது தாக்கல் செய்யாததற்கு எந்த அபராதமும் இல்லை.இருப்பினும், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவழித்தாலோ, வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறினாலோ, அல்லது தாமதமாகத் தாக்கல் செய்தாலோ, உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.உங்கள் வருமான வரியில் நிலுவைத் தொகை இருந்து, சரியான நேரத்தில் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றால், நிலுவைத் தொகைக்கு மாதத்திற்கு ஒரு சதவிகிதம் எளிய வட்டி வசூலிக்கப்படும்.உங்களுக்கு ஒரு வணிக அல்லது மூலதன இழப்பு ஏற்பட்டு, நீங்கள் வரிக் கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு உங்கள் வருமானத்தில் அந்த இழப்பைக் காட்ட முடியாது.நீங்கள் அதிக வரி செலுத்தி, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அல்லது வருமான வரி ரிட்டன்சுக்கு தகுதியுடையவராக இருந்தால், உங்கள் வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்வதும் பணத்தைத் திரும்பப் பெறுவதை தாமதப்படுத்தக்கூடும்.கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம். வரி செலுத்த வேண்டிய தொகை ரூ.25,000க்கு மேல் இருந்தால், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.மற்ற சந்தர்ப்பங்களில், மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிடிஎஸ் (TDS) செலுத்திய பிறகு, நீங்கள் வருமான வரிக்கு உட்பட்டவராக இல்லாவிட்டால், அதைக் கோர நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.”நீங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தொடங்கியதும், ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்கிறார் கரீம் லக்கானி.
“அந்த ஆண்டுக்கான விதிகளின்படி நீங்கள் வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யத் தகுதியற்றவராக இருந்தால், நீங்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை. அதாவது, அந்த ஆண்டுக்கான மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பைவிடக் குறைவாக இருந்தால், வேறு எந்த நிபந்தனைகளும் பொருந்தவில்லை என்றால், அந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை,” என்று அவர் கூறினார்.
உதாரணமாக, “2023-24 மதிப்பீட்டு ஆண்டில் உங்கள் வருமானம் ரூ. 3 லட்சமாக இருந்தது என்றும், நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டில், அதாவது 2024-25இல், உங்கள் வருமானம் ரூ. 2 லட்சமாக மட்டுமே இருக்கும். அப்படியானால் நீங்கள் ஐடி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்கிறார் கரீம்.
இருப்பினும், ஐடி ரிட்டன்ஸை தவறாமல் தாக்கல் செய்வது நல்லது என்று கரீம் லக்கானி அறிவுறுத்துகிறார். இது பொருளாதார ஒழுக்கத்தைக் காட்டுவதாகவும் எதிர்காலத்தில் கடன்களைப் பெறுவதை எளிதாக்குவதாகவும் அவர் கூறுகிறார்.
டிடிஎஸ் (TDS) செலுத்திய பிறகு, நீங்கள் வருமான வரிக்கு உட்பட்டவராக இல்லாவிட்டால், அதைக் கோர நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி, எதிர்கால வருமானம் அல்லது லாபங்களுக்கு எதிராக வணிக இழப்புகளை ஈடுசெய்ய விரும்பினால், உங்கள் வருமானம் வரி ‘அடிப்படை விலக்கு வரம்புக்கு’ கீழே இருந்தாலும், நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை நிறுத்திய பிறகு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது சில விஷயங்களைப் பொறுத்தது.
வருமானம்: ஓய்வுக்குப் பிறகு உங்கள் வருமான ஆதாரங்கள் அல்லது வழிகள் என்ன? உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? வங்கிகளிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை வருமானம் போன்றவை உள்ளதா? அப்படி கிடைக்கும் இந்தத் தொகை ‘அடிப்படை விலக்கு வரம்பை’ மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஓய்வூதியம்: ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் ஓய்வூதியமும் வருமானமாகக் கருதப்படுகிறது. ஓய்வூதியம் மூலம் பெறப்படும் வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்பை’ மீறினால், வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கிப் பரிவர்த்தனைகள்: ஓய்வுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் பெரிய பரிவர்த்தனைகள் நடந்தால், உதாரணமாக, கணக்கில் ரூ. 1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவழித்தாலோ, வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு நபரின் வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்பை’ விடக் குறைவாக இருந்தாலும், வருமானக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி திரும்பப் பெறுதல் கோரிக்கை: நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு உங்கள் சம்பளத்தில் இருந்து அதிக டிடிஎஸ் (TDS) செலுத்தியிருந்தால், பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
நன்மைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஐடி ரிட்டன்ஸை தவறாமல் மற்றும் சரியான நேரத்தில் தாக்கல் செய்ய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
ஐடி ரிட்டன்ஸ் என்பது உங்கள் வருமானத்திற்கான அதிகாரபூர்வ சான்று. இது அனைத்து வகையான கடன் விண்ணப்பங்கள், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அல்லது முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கை கேட்கின்றன.
வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, பல நாடுகளின் தூதரகங்கள் கடந்த சில ஆண்டுகளாக, வருமான வரிக் கணக்கை கேட்டு வருகின்றன.
வரி செலுத்துவது உங்களது பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வருமானத்திற்கு சான்று. இது விசா பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அரசாங்க டெண்டர்கள் மற்றும் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போதுகூட, கடந்த சில ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கூடுதலாக, ஐடி ரிட்டன்ஸ் உங்கள் முகவரிக்கான சான்றாகவும் கருதப்படுகின்றன.
பெரிய காப்பீட்டுக் கொள்கைகளை எடுக்கும்போது, சில காப்பீட்டு நிறுவனங்கள் ஐடி ரிட்டன்ஸை கேட்கலாம்.
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் மொத்த வருமானம் மற்றும் வேறு சில காரணிகளைப் பொறுத்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.