தமிழ்மக்கள் கூட்டணிக் கட்சிக்குள் விரைவில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கட்சியின்தலைவராக நான் பொறுப்பேற்று முக்கியமான நடைமுறை  அதிகாரங்களைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ளேன் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்மக்கள் கூட்டணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) மாலை பொற்பதி வீதி, யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அமைந்துள்ள அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.